10 ஆயிரம் பணிகள்.. இளைஞர்களே ரெடியா இருங்க

75பார்த்தது
10 ஆயிரம் பணிகள்.. இளைஞர்களே ரெடியா இருங்க
2024-25 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டமன்றத்தில் வாசித்தார். அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படும். வரும் ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளைஞர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், உலகை வெல்லும் இளைய தமிழகத்தைப் படைக்கும் உயரிய நோக்கத்தோடு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் இதுவரை சுமார் 28 லட்சம் மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி