நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே சிங்கம்பாறை இந்திரா நகரை சேர்ந்த பார்வதியின் 2வது மகன் சூர்யா (எ) அந்தோணி சூர்யா வீட்டிற்கு சரியாக பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் குடும்ப பிரச்னையில் பார்வதியை அந்தோணி சூர்யா கையால் தாக்கியுள்ளார். இதுகுறித்து பார்வதி அளித்த புகாரில் முக்கூடல் போலீசார் விசாரணை மேற்கொண்டு சூர்யா என்ற அந்தோணி சூர்யாவை கைது செய்தனர்.