தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ளஎல்.பி. நகரில் வசிக்கும் பிந்துக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். பின்னர், 2வதாக ஒருவருடன் பிந்துவுக்கு தொடர்பு இருந்துவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து 3வதாக, அங்கித் சாகேத் என்பவரை காதலித்துள்ளார். இந்நிலையில், அங்கித் உடன் பிந்து சென்றுவிட்டதாக தெரிகிறது. இதனையறிந்த 2வது காதலர், இருவரையும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.