ஜல்லிக்கட்டு சிந்துவெளி நாகரிகத்திற்கு முற்பட்டது. சிந்துவெளியில் காளை முத்திரை பொறிக்கப்பட்ட சின்னங்கள் கிடைக்கிறதென்றால், அதற்கு முன்பே காளையை மையப்படுத்திய விளையாட்டு இருந்துள்ளது என்றே பொருள். தமிழ்நாட்டில் கண்டுப்பிடிக்கப்பட்ட கல்வெட்டுகளிலேயே மிகவும் பழமையானது தேனி புலிமான் கோம்பையில் கிடைத்த நடுகல். அசோகர் காலத்திற்கு முந்தைய நடுகல் அது. காளையை கவர வரும் வீரர்களை பற்றி அது விவரிக்கிறது.