இயற்கையாகவே கழிவுகளை வெளியேற்றக் கூடிய திறன் வெல்லம் தண்ணீருக்கு உண்டு. இது செரிமானக் கட்டமைப்பை மேம்படுத்தும். வயிறு நிரம்ப சாப்பிடும் தருணங்களில் கூட செரிமானத்திற்காக சிறிது வெல்லம் கலந்த நீரை அருந்தலாம். அதிகாலை நேரத்தில் வெல்லம் கலந்த நீரை அருந்தினால் உடலுக்கு ஆற்றல் கொடுக்கும் என கூறப்படுகிறது. கடாயில் தண்ணீர் வைத்து சூடாக்கி சிறு துண்டு வெல்லத்தை போட்டு, அது கரைந்தவுடன் அருந்தலாம்.