கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் 18, 19 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. 18-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 19-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என கூறப்பட்டுள்ளது.