பிரதம மந்திரி கிசான் யோஜனா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள விவசாயி குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இதில் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் செய்ததாக ஆர்.சச்சிதானந்தம் எம்பி தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “ஒன்றிய அரசு செயல்படுத்தும் பிஎம் கிசான் திட்டத்தில், பிரதான அரிசி உற்பத்தி மாநிலமான தமிழ்நாட்டுக்கு மட்டும் பயனாளிகள் எண்ணிக்கையை சரிபாதிக்கும் மேலாக குறைத்து, பாஜக அரசு துரோகம் செய்துள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.