திண்டுக்கல்: மைக்கேல்பாளையத்திலுள்ள தனியார் பீர்க்கங்காய் தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த ஆண், பெண் சடலம் கிடந்துள்ளது. இறந்தவர்கள் சகாயராஜ் மனைவி ஆலிஸ், கோட்டூரைச் சேர்ந்த ஜெபஸ்டின் என்பது தெரியவந்தது. கள்ளக்காதலுக்கு இடையூறு வருவதை எண்ணிய இருவரும் தங்கள் வழக்கம் போல் சந்தித்துக் கொள்ளும் தோட்டத்தில் உயிரை மாய்த்துக் கொண்டனர். ஆலிஸ் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டதை அடுத்து ஜெபஸ்டின் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.