தேனி மாவட்டம் கம்பத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது "நந்தகோபாலன் தம்பிரான் மாட்டுத்தொழுவம்" எனும் மாடுகளுக்கு என அமைக்கப்பட்டுள்ள கோயில். இங்கு மாடுகளை மட்டுமே வைத்து கோயிலாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த மாட்டுத் தொழுவில் உள்ள ஒரு காளையை தேர்ந்தெடுத்து அதற்கு பட்டத்துக்காளை என பெயர் சூட்டப்படும். அந்த காளைக்கு மாட்டுப்பொங்கலன்று அரசனுக்கு கொடுக்கப்படும் பட்டத்து மரியாதை செய்யப்படுகிறது.