பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடுகளுக்கு மாலை அணிவித்து வண்ண பொடி பூசினால் போட்டி நிறுத்தப்படும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா எச்சரித்துள்ளார். இதுகுறித்து சங்கீதா கூறியதாவது, "காளைகளுக்கு பூ மாலை அணிவித்து அழைத்து வரக்கூடாது என பலமுறை அறிவுறுத்தியும் அந்த தவறு மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டில் இனி பூ மாலையுடன் காளை அவிழ்க்கப்பட்டால் காளை தகுதிநீக்கம் செய்யப்படும், ஜல்லிக்கட்டு நிறுத்தப்படும் என" விழா கமிட்டியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.