திருவள்ளுவர் தினமான இன்று, காவி உடை தரித்த வள்ளுவர் புகைப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் தூவி மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு காவி உடை தரித்த வள்ளுவர் படத்தை ஆளுநர் பயன்படுத்தியது சர்ச்சையான நிலையில், இந்த ஆண்டும் அதே போன்ற புகைப்படத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்துள்ளார். மேலும், "சனாதன நாகரிக மரபில் வாழ்க்கையின் ஆழத்தை கற்று கொடுத்தவர் வள்ளுவர். திருவள்ளுவரின் பக்தரான பிரதமர் மோடிக்கு நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.