சூர்யா பிறந்தநாள்.. ரீ-ரிலீஸ் ஆகும் படங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள படம் 'கங்குவா'. அதனைத்தொடர்ந்து நடிகர் சூர்யா தனது 44-வது படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூர்யா தனது 49-வது பிறந்தநாளை அடுத்த மாதம் 23-ம் தேதி கொண்டாட உள்ளார். அவரது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவர் நடித்து மிகவும் பிரபலமான சில படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், காக்க காக்க, கஜினி, வாரணம் ஆயிரம், அயன் மற்றும் சிங்கம் ஆகிய படங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சூர்யா ரசிகள் உற்சாகத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி