காதலியை கண்மூடித்தனமாக தாக்கிய இளைஞர்.. (வீடியோ)

77பார்த்தது
உத்தரப்பிரதேசத்தின் ஜான்சி பகுதியில் காதலியை, இளைஞர் ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை அரங்கேறியுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நவாபாத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பிச்சோர் பகுதியில் இளைஞர் ஒருவர் தனது காதலியை நடுரோட்டில் கீழே தள்ளி கடுமையாக தாக்கினார்.
தலைமுடியைப் பிடித்து இழுத்து, முதுகில் முழங்கையால் குத்தி ஆத்திரம் தீர அடித்து உடைத்தார். இந்த சம்பவத்தை அங்கிருந்த ஏராளமானோர் பார்வையிட்டனர். அந்த இளைஞனை யாரும் தடுக்க முயற்சிக்கவில்லை. காதலியை நடுரோட்டில் வைத்து தாக்குவதற்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி