மாஞ்சோலை தொழிலாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன்

73பார்த்தது
மாஞ்சோலை தொழிலாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன்
திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் முடிவுக்கு எதிராக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் குரல் கொடுத்துள்ளார். இந்த நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து எஸ்டேட் மக்களை சந்தித்த ஜான் பாண்டியன், அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிந்தார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 5 தலைமுறைகளாக இந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் தேயிலைத் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாத மக்கள், சொந்த வீடு வாசல் கூட இல்லாத மக்கள் BBTCL தேயிலை நிறுவனத்தின் திடீர் முடிவால் நாளைய எதிர்காலம் கேள்வி குறியாகி நிற்கின்ற நிலையில் என்னிடம் அழுது புலம்புவதை காணும் போது மனம் மிகவும் வேதனையாக இருக்கிறது.

தமிழக அரசு உடனடியாக மக்களிடம் கருத்து கேட்பு நடத்தவும். தேயிலை நிறுவனத்தை அரசே ஏற்று நடத்தி அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து அவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி