டெல்லி விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு

டெல்லியில் கனமழை காரணமாக விமான நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார். டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் மேற்கூரை திடீரென இடிந்து கார்களின் மீது விழுந்தது. இதையடுத்து, உள்ளே சிக்கியவர்களை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். மேலும், இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த 4 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி