எடப்பாடி தொடர்பான வழக்கில் அமைச்சர் உதயநிதி பதில் மனு

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் உதயநிதி பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார். கோடநாடு வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேசியதற்கு தடை கோரியும், ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் அதிமுக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில், கொடநாடு சம்பவம் நடந்த போது முதல்வர் என்ற பொது ஊழியராக அவரது செயல்பாடு குறித்து பொதுநலன் அடிப்படையில் அறிக்கை வெளியிட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உதயநிதியின் இந்த பதில் மனு மீது விளக்கமளிக்க எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அவகாசம் வழங்கி விசாரணையை பிப்ரவரி 26ஆம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளிவைத்தது.

தொடர்புடைய செய்தி