சேவியர் குமார் படுகொலை - அமைச்சர் மீது குற்றச்சாட்டு!

69216பார்த்தது
கன்னியாகுமரியில் நாம் தமிழர் நிர்வாகி சேவியர் குமார் படுகொலைக்கு பின்னால் அமைச்சர் மனோ தங்கராஜ் இருப்பதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட நாதக தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர்குமார் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மைலோடு புனித மிக்கேல் அதிதூதர் ஆலய பங்குத்தந்தை அலுவலகத்துக்குள் அடித்துக் கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். ஆலய பங்குத்தந்தை, அரசு வக்கீல் மற்றும் தி.மு.க ஒன்றிய செயலாளர் உட்பட 8 பேர் தலைமறைவாகி உள்ளனர். இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இவரது கொலைக்கு நீதி கேட்டு நாம் தமிழர் கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த கொலைக்கு பின்னால் அமைச்சர் மனோ தங்கராஜ் இருப்பதாக நாதகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி