நவீன நெல் சேமிப்பு தளங்களை திறந்து வைத்த முதல்வர்!

84பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த இடமணல் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் ரூ.21.81 கோடி மதிப்பீட்டில் மேற்கூறையுடன் கூடிய 16 நவீன நெல் சேமிப்பு தளங்களை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி