வேங்கைவயல் தீண்டாமை சம்பவத்தில் புதிய திருப்பம்!

84பார்த்தது
வேங்கைவயல் தீண்டாமை சம்பவத்தில் புதிய திருப்பம்!
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் சமூக விரோதிகளால் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்த குடிநீர் தொட்டியில் ஏற்கனவே நிலவும் சாதிய முன்விரோதத்தால் மனித கழிவுகள் கலக்கப்பட்டதாக கூறப்பட்டது. அந்தத் தண்ணீரை பயன்படுத்திய மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு வசிக்கும் 31 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள சோதனை முடிவில் குடிநீர் தொட்டியில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியுடன் எந்த டிஎன்ஏக்களும் ஒத்துப் போகவில்லை என தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி