மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் மாணவிகள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகின்ற ஜூன் 25ஆம் தேதி தொடங்க உள்ளதாக அக்கல்லூரியின் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "மதுரை மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியில் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவிகள் சேர்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வருகின்ற 25, 26, 27 ஆகிய மூன்று நாட்கள் தினமும் காலை 9 மணிக்கு கல்லூரி கயல் அரங்கத்தில் தொடங்கி நடைபெற உள்ளது" என தகவல் தெரிவித்துள்ளார்.