சபாநாயகர் பதவி ராஜினாமா.! அடுத்த சபாநாயகர் யார்.?

70பார்த்தது
சபாநாயகர் பதவி ராஜினாமா.! அடுத்த சபாநாயகர் யார்.?
17வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 18வது மக்களவையின் சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கான வேட்பு மனு தாக்கல் ஜூன் 25ம் தேதி நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது. சபாநாயகர் தேர்தல் 26ம் தேதி நடக்கிறது. இதற்கிடையே அடுத்த சபாநாயகர் யார்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜகவிற்கு குடைச்சல் தரும் விதத்தில் ‘இண்டியா’ கூட்டணி போட்டி சபாநாயகர் வேட்பாளரை நிறுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி