ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1, 412 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.
இதில் ஒரு கிலோ குறைந்தபட்ச விலையாக 22 ரூபாய் 11 காசுக்கும், அதிகபட்ச விலையாக 26 ரூபாய் 11 காசுக்கும், சராசரி விலையாக 25 ரூபாய் 11 காசுக்கும் ஏலம் போனது. மொத்தம் 573 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 14 ஆயிரத்து 111 ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது.