கிரிக்கெட் வீரர் படங்களை திரைச்சீலையில் வடிவமைத்த இளைஞர்

2582பார்த்தது
கிரிக்கெட் வீரர் படங்களை திரைச்சீலையில் வடிவமைத்த இளைஞர்
பெருந்துறையை அடுத்துள்ள சென்னிமலையை சேர்ந்தவர் அப்புசாமி. கைத்தறி நெசவாளர் குடும்பத்தை சேர்ந்த இவர் தீவிர கிரிக்கெட் ரசிகராக இருந்து வருகிறார். அப்புசாமி கைத்தறி துணி டிசைன் வடிவமைப்பாளராக இருப்பதால் அந்தந்த காலகட்டத்தில் நிகழும் நிகழ்வுகளை கம்ப்யூட்டர் மூலம் வடிவமைத்து அதனை கைத்தறியில் உருவாக்கி வருகிறார். அதன்படி மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி உள்ளிட்டோரின் உருவத்தை வடிவமைத்து அதனை கைத்தறி துணியில் உற்பத்தி செய்துள்ளார்.

அந்த வகையில் கடந்த ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டியில் வெற்றி பெற உறுதுணையாக இருந்த ஜடேஜாவை தோனி தூக்கி மகிழும் புகைப்படத்தை எலக்ட்ரானிக் ஜக்கார்டு மூலம் வடிவமைத்து அதனை கைத்தறி துணியில் திரைச்சீலையாக அப்புசாமி உருவாக்கியுள்ளார். 14 அங்குல அகலமும், 36 அங்குல நீளமும், 120 கிராம் எடையும் கொண்ட இந்த திரைச்சீலையை கிரிக்கெட் வீரர் சடேஜாவுக்கு நேரில் பரிசளிக்க ஆவலாக உள்ளதாக அப்புசாமி தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி