டென்னிஸ் மைதானத்தில் மயங்கி விழுந்த வீரர் (வீடியோ)

60பார்த்தது
மியாமியில் நடைபெற்ற போட்டியின் போது பிரான்ஸ் டென்னிஸ் வீரர் ஆர்தர் கஜாக்ஸ் மயங்கி விழுந்தார். சக பிரான்ஸ் வீரர் ஹரோல்ட் மைலோட்டிற்கு எதிராக திங்கள்கிழமை நடந்த மூன்றாவது செட்டில் ஆர்தர் திடீரென சரிந்து விழுந்தார். ஆனால், உடனடியாக டாக்டர்கள் வராதது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. சிறிது நேரத்தில் பிசியோ வந்து அவரை பரிசோதித்தார். உடனடியாக அவரை சக்கர நாற்காலியில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி