குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து, மகளி நலனுக்காக தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நிறுவனம் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரரின் கருத்துரு (Booklet-4) தமிழ்-2. ஆங்கிலம்-2 புத்தக வடிவத்தில் தயாரிக்கப்பட்டு, புகைப்படத்துடன் மாவட்ட சமூக நல அலுவலகத்தில்
ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.