4-ம் நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலியா விக்கெட் காலி

பெர்த்: பார்டர் கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான இன்று தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்திருக்கிறது. ஆஸ்திரேலியா அணி 534 என்ற இமாலய இலக்கை துரத்தி வரும் நிலையில், 10 மணி நிலவரப்படி 5 விக்கெட்டுகளை இழந்து 104 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே சிராஜின் பந்தில் கீப்பர் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து கவாஜா வெளியேறினார். பின்னர் ஸ்மித்தும் அதேபோன்று சிராஜிடம் வீழ்ந்தார். ஆஸ்திரேலியா வெற்றிபெற 430 ரன்கள் தேவை.

தொடர்புடைய செய்தி