கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி நபர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட பதறவைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தக்கலையில் கவனக்குறைவாக சாலையைக் கடந்த நபர் மீது அதிவேகமாக வந்த அரசுப் பேருந்து மோதியுள்ளது. இதில் அந்த நபர் பல அடி தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டுள்ளார். நல்வாய்ப்பாக அந்த நபர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.