கர்நாடகா மாநிலம் ஹாவேரியில் கன்னத்தில் காயமடைந்த சிறுவனுக்கு தையல் போடாமல், பெவிகுயிக் தடவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடூர் ஆரம்ப சுகாதார மையத்தில் கன்னத்தில் காயம் ஏற்பட்டதாக சிறுவன் அனுமதிக்கப்பட்டார். அப்போது, அங்கிருந்த செவிலி ஒருவர் காயத்தில் பெவிகுயிக் போட்டுள்ளார். கன்னத்தில் தையல் போட்டால் தழும்பு ஏற்படும் என்பதால் பெவிகுயிக் தடவியதாக செவிலி கூறியுள்ளார். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.