சுரைக்காய் அதிக நீர் உள்ள ஒரு காய் ஆகும். இதை காலை வெறும் வயிற்றில் ஜூஸாக குடித்து வந்தால் உடல் எடை வெகுவாக குறைக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டும். உடலின் வெப்பநிலை, பித்தத்தை சமன் செய்யும். சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய தொற்று, எரிச்சல் ஆகியவை குணமாகும். சுரைக்காயை அரைத்து உடலில் பூசி குளித்து வந்தால் உடலின் வெப்பநிலை குறையும். உடலில் தேங்கியிருக்கும் கெட்ட கொழுப்புக்களை கரைக்கும் தன்மை கொண்டது.