இந்த நிதியாண்டின் ஏப்ரல் - ஜனவரி காலகட்டத்தில் சிமெண்ட் விலை 7% வரை குறைந்துள்ளதாக மதிப்பீட்டு நிறுவனமான இண்ட்-ரா அறிக்கையில் தெரிவித்துள்ளது. தேவைக் குறைவு, முன்னணி நிறுவனங்களிடையே அதிகரித்து வரும் போட்டி ஆகியவை காரணமாக கடந்த நிதியாண்டைக் காட்டிலும் விலை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. 2024 நவம்பர் முதல் சிமெண்ட் விலை அதிகரித்தாலும், அவை கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் இது குறைவே எனக் கூறியுள்ளது.