2வது நாளாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் ஆஜர்

57பார்த்தது
2வது நாளாக ஜாபர் சாதிக்கின் சகோதரர் ஆஜர்
சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம், 2வது நாளாக அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகியுள்ளார். தனது வழக்கறிஞரோடு நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் சலீம் ஆஜர் ஆகியுள்ளார். நேற்று 3 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இன்று மீண்டும் ஆஜரானார். வங்கி பரிவர்த்தனை உள்ளிட்ட ஆவணங்களோடு ஆஜரான சலீமிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் சகோதரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி