மோசமான வானிலை - அந்தமான் விமானம் சென்னையில் தரையிறக்கம்

62பார்த்தது
மோசமான வானிலை - அந்தமான் விமானம் சென்னையில் தரையிறக்கம்
தமிழ்நாட்டில் கோடை மழை கொட்டித் தீர்த்து வருகிறது. தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று (மே 22) சென்னையில் இருந்து அந்தமான் சென்ற ஆகாஷா விமானம் மோசமான வானிலை காரணமாக மீண்டும் சென்னை திரும்பியது. 186 பயணிகளுடன் அந்தமான் புறப்பட்ட நிலையில் மழை காரணமாக ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் அந்த விமானம் மீண்டும் சென்னை வந்தது. இதனால், பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.

தொடர்புடைய செய்தி