திடீரென சாய்ந்த பெருமாள் பல்லக்கு - பக்தர்கள் அதிர்ச்சி!

18190பார்த்தது
சென்னை திருவொற்றியூர் காலடிப்பேட்டையில் ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் 15 ஆண்டுகளுக்கு மேலாக ராஜகோபுரம் பணி நடந்து வந்த நிலையில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (மே 22) ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கருட சேவை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, திடீரென கருட சேவையில் தண்டு உடைந்து பெருமாள் பல்லக்கு சாய்ந்தது. இந்த விபத்தில் அர்ச்சகருக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக உடனடியாக கோபுர வாசல் மூடப்பட்டது.

தொடர்புடைய செய்தி