ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு நிராகரிப்பு

82பார்த்தது
ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு நிராகரிப்பு
ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (மே 22) நிராகரித்துள்ளது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இடைக்கால ஜாமீன் வழங்கக் கோரிய ஹேமந்த் மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்தது. இதற்கிடையில், ஜார்க்கண்டில் நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் சோரனை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி 31 அன்று கைது செய்தது. அன்று முதல் அவர் சிறையில் இருந்து வருகிறார்.