ஆற்றில் மூழ்கிய இளைஞர்கள் - காப்பாற்ற சென்ற 3 பேர் பலி

73பார்த்தது
ஆற்றில் மூழ்கிய இளைஞர்கள் - காப்பாற்ற சென்ற 3 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலம் அகமதுநகரில் இன்று (மே 23) மாநில பேரிடர் மீட்புக் குழு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தொடர்ந்து ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட பேரிடர் மீட்புக் குழுவைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உயிரிழந்துள்ளனர். ஆற்றில் மூழ்கிய 2 இளைஞர்களைக் காப்பாற்ற சென்ற இடத்தில் மீட்பு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், நீரில் மூழ்கிய 2 இளைஞர்களை தேடும் பணியை மீட்புக் குழு தீவிரப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி