திருப்பூர் மாவட்டம் அ.குரும்பாளையம் பகுதியைச் சிறுவன், அப்பகுதியில் உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார். அப்போது, மோகன்ராஜ் என்பவரது காரில் சிறுவன் கிறுக்கியதாக தெரிகிறது. இதனால், கடுப்பான மோகன்ராஜ், சிறுவனை தாக்கியுள்ளார். இதனால், மோகன்ராஜுக்கும், சிறுவனது உறவினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, சிறுவரின் உறவினர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பினார். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் மோகனராஜை தேடி வருகின்றனர்.