சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் வாகனத்தை பாலத்தின் மேல் நிறுத்திவிட்டு கீழே குதித்துள்ளார். இதையடித்து, உயிரிழந்த இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.