பெண்ணை ஹெல்மெட்டால் தாங்கிய இளைஞன் (வீடியோ)

53பார்த்தது
சென்னையில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கோயம்பேடு மேம்பாலத்தில் நடந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் - பெண் இருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென பைக்கை நிறுத்திய அந்த இளைஞர் தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை கழற்றி அந்த பெண்ணை தாக்கினார். இதனால் அந்த பெண் மயக்கமடைந்து கீழே சுருண்டு விழுந்தார். பின்னர் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 'அண்ணா வாங்க அண்ணா' என அருகில் இருந்தவர்களை அந்த ஆண் உதவிக்கு அழைத்த வீடியோ வைரலாகிவருகிறது.

தொடர்புடைய செய்தி