ஜிம் ட்ரெய்னர் பரிந்துரைத்த ஊசியை செலுத்திய 35 வயது இளைஞர் கல்லீரல் பாதிப்படைந்து உயிரிழந்த சோகம் சென்னையில் நடந்துள்ளது. காசிமேடு பகுதியைச் சேர்ந்த ராம்கி கடந்த 6 மாதமாக Sweat Zone ஜிம்முக்குச் சென்று கட்டுமஸ்தான் உடலுக்கு முயற்சித்துள்ளார். ஜிம் ட்ரெய்னர் தினேஷ் சந்திரமோகன் பரிந்துரையில் ஊசி செலுத்திக்கொண்டவர் கல்லீரல் பாதிக்கப்பட்டு கடும் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். உறவினர்கள் ஜிம் ட்ரெய்னருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைக்கின்றனர்.