ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், ஓலா S1 Z மற்றும் ஓலா கிக் (Ola Gig) ஆகிய இரண்டு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. S1 Z மற்றும் S1 Z+ மாடல்களை உள்ளடக்கிய Ola S1 Z சீரிஸின் விலை முறையே ரூ.59,999 மற்றும் ரூ.64,999 ஆகும். இந்த ஸ்கூட்டர்களில் இரண்டு 1.5 kWh எளிதில் கழற்றி மாற்றக்கூடிய பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் வீட்டிலுள்ள விளக்குகள், மின்விசிறிகள், டிவி மற்றும் வைஃபை ரூட்டர் போன்ற பொருட்களை மூன்று மணி நேரம் வரை இயக்க முடியும்.