குடிநீரில் கலந்த கழிவுநீர்.. மேலும் ஒரு பெண் பலி

82பார்த்தது
குடிநீரில் கலந்த கழிவுநீர்.. மேலும் ஒரு பெண் பலி
சென்னை: பல்லாவரம் அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. இதனால், 23 பேர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில், திருவேதி என்பவர் உயிரிழந்த நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்த வரலட்சுமி என்பவரும் தற்போது சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். முன்னதாக, “குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவில்லை” என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறிய நிலையில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி