அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்பக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று (டிச. 16) தொடங்கியது. விண்ணப்பதாரர்கள் www.tndteetconline.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 17 ஆகும். ஜனவரி 19 வரை அபராத கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.