அய்யா வைகுண்டசாமியின் 193வது பிறந்த நாள் விழா நாளை (மார்ச். 04) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதே போல மேல்மலையனூர் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை விழுப்புரம் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களில் நாளை பள்ளி - கல்லூரிகள் செயல்படாது.