திண்டுக்கல் மாவட்டம் பழனியில் திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பிறந்த தினத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் (ஜன., 06) நிர்வாகிகள் தங்கரதம் இழுத்து சிறப்பு வழிபாடு செய்தனர். திமுக மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பாஸ்கரன், காளீஸ்வரி பாஸ்கரன் ஆகியோர் தலைமையில் சிறப்பு பூஜைக்கு பிறகு தங்கரதம் இழுத்து வழிபாடு செய்தனர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.