நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், சாப்பிடுவதற்காக மேகி நூடுல்ஸ் வாங்கியுள்ளார். அந்த பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது, அதில் புழுக்கள் இருந்துள்ளன. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர், பாக்கெட்டில் இருந்த காலாவதி தேதியை சரிபார்த்துள்ளார். அதில், காலாவதி ஆவதற்கு ஒரு மாத காலம் இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் வெளியிட்ட வாடிக்கையாளர், நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.