'பிக்பாஸ்' செட்டில் இருந்து விழுந்து தொழிலாளர் காயம்

74பார்த்தது
'பிக்பாஸ்' செட்டில் இருந்து விழுந்து தொழிலாளர் காயம்
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் பகுதியில் தனியார் பிலிம் சிட்டியில் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு பிரம்மாண்ட வீடு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அந்த வீட்டின் உட்பகுதியில் சில பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில், சாயின் கான்( 47) உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் இன்று (செப்.25) காலை ஈடுபட்டனர். அப்போது சாயின் கான் 20 அடி உயரத்தில் இருந்து விழுந்து காயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி