திருப்பூர் வீரராகவ பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியன்று சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அவர்களுக்கு வழங்கிட திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட் சார்பில் 15வது ஆண்டாக 1 லட்சத்து 8 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சர்க்கரை 3 டன், கடலை மாவு 1½ டன், 150 டின் என்னை, திராட்சை, முந்திரி, நெய் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி பிரசாதமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.