வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களில் சிறுத்தை நடமாட்டம் உள்ளது. இதையடுத்து ஏ.ஐ. தொழில்நுட்பத்துடன் கூடிய கேமரா மற்றும் ஒலிகளை வைத்து சிறுத்தையை விரட்ட வனத்துறையினர் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளனர். வேலூரில் உள்ள மற்ற கிராமங்களிலும் இதுபோன்ற புதிய முறையை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.