பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பல்லோ கிராம ஊராட்சி நிர்வாகம் மது விருந்து கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய உத்தியை கையில் எடுத்து வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, திருமண நிகழ்ச்சிகளில் மதுபான விருந்து இல்லாமல், டிஜே இசையை இசைக்காமல் இருந்தால் அந்த திருமண வீட்டாருக்கு ரூ. 21 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அறிவிப்பாகவும் வெளியிடப்பட்டுள்ளது.