கன்னியாகுமரி: தக்கலையை சேர்ந்தவர் தங்கராஜ் (63). இவர் மனைவி அமுதகலா (50). இவர்களது மகள் சுமாராணிக்கு திருமணம் ஆகிவிட்டது. மகன் மெல்பின் (23) பெந்தகோஸ்தே சபை போதகர். இவர்கள் குடும்பம் கடன் பிரச்னையால் தவித்து வந்த நிலையில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து அமுதகலா மற்றும் மெல்பின் தற்கொலை செய்து கொண்டனர், குளிர்பானத்தை தங்கராஜ் குடிக்காததால் உயிர் தப்பினார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.